Friday, June 14, 2013

எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்-- இயற்கை மருத்துவம்

கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்

புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்

Tuesday, June 11, 2013

கோடைக்கு கொடையாகும் பழங்கள்

கோடை கடுமையானதுதான். ஆனால் அதற்கேற்பச் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் கோடையின் கொடுமையில் இருந்து தப்பித்துவிட முடியும். அந்த வகையில் சில பழங்கள் நமக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. அவை பற்றி… * தர்பூசணி: தற்போது எங்கும் கிடைக்கும் தர்பூசணி, தாகத்தைத் தணிக்கும். பசியைப் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடி வயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறு நீரகக் கோளாறுகள், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவும். உடலுக்குக் குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும்.
* ஆரஞ்சு: பசியைத் தூண்டவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படுகிறது. ஆரஞ்சை ஆயுர்வேத வைத்திய முறை பெரிதும் பயன்படுத்துகிறது. ஆரஞ்சு வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும். ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது.
* சாத்துக்குடி: குளிர்ச்சியான, இனிப்பான, சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சிநிலை, ரத்தத்தில் கழிவுப்பொருட்கள் சேருதல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.
வயிற்றில் அமிலத்தன்மை சேருவதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிற்று எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகம் கொண் சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்ல பலனிருக்கும்.
காய்ச்சலின்போது வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்கும்.
* வெள்ளரிக்காய்: வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து குடல்களுக்குக் குளிர்ச்சியூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

தலை சுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரி, மூட்டுவலி வீக்க நோய்களையும் குணமாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கோடையில் நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறி வெள்ளரி.   

கறிவேப்பிலை

சமையல் சுவையைக் கூட்ட உதவும் கறிவேப்பிலை கடைகளில் காய்கறி வாங்கும் போது கொசுறாகவும் கிடைப்பதாலோ என்னவோ அதன் அருமை பெருமை பலருக்கும் தெரிவதில்லை. உணவுச் செரிமானத்துக்கு ஓர் உன்னதமான பொருளாக விளங்குகிறது கறிவேப்பிலை. 


வைட்டமின் ஏ சுண்ணாம்பு சத்து போலிக் ஆசிட் போன்றவை இதில் நிரம்பி உள்ளன. இரும்புச்சத்தை மிகைப்படுத்தி உடலுக்கு உறுதியைக் கொடுக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத்தாது அடர்த்திக் குறைவு நோய் முதுமைப் பருவத்தில் வருவதைத் தடுக்கிறது. 


கெட்ட கொழுப்பை கரைத்து பட்டழகை கொடுக்கிறது. பூச்சிக்கடி ஒவ்வாமையால் தோலில் ஏற்படும் அரிப்பைத் தணிக்கிறது.இதிலுள்ள பி- கரோட்டீன் உடல் உள் இயக்கத்தை சீர்படுத்துகிறது. கண் பார்வை கூர்மைக்கும் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரவும் கறிவேப்பிலை சிறந்த மூலிகை போன்று செய்லபடுகிறது. 


இளநரையை கட்டுப்படுத்துகிறது. இதன் இலைகளை அரைத்து தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் கலந்து காய்ந்து பயன்படுத்துவதும நல்ல பலனைத் தரும். நீரிழிவுநோய் உள்ளவர்கள் கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். 


இலையை காய வைத்து அரைத்து பொடியாக தயார்செய்து தண்ணீரில் கலந்தும் பருகலாம். தன் மருத்துவக் குணங்களால் வெளிநாட்டினர் மருத்துவக் குணங்களால் வெளிநாட்டினர் வியக்கும். 


இந்தியாவில் உள்ள சிறந்த மூலிகை வகைகளில் வேப்பிலையுடன் கறிவேப்பிலையும் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் பூர்வீகம் தென் இந்தியா என்பது பெருமைக்குரியது.